திருமுருகன்பூண்டி

அவிநாசியில் இருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது. திருப்பூரிலிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது.

முருகப்பெருமான் முன்பக்கம் ஐந்து திருமுகங்களுடன் பின்புறம் ஒரு திருமுகத்துடன் பன்னிரு கரங்கள் கொண்டு வள்ளி தெய்வானை சமேதராக தென்திசை நோக்கி காட்சி தருகின்றான். முன்னே ஐந்து திருமுகங்களுடனும், பின்னே ஒரு திருமுகத்துடனும் காட்சி தருவது வேறு எங்கும் காணப்படாத அற்புதக் காட்சியாகும். புத்தி கோளாறு, செய்வினை போன்ற தீவினைகளால் பீடிக்கப் பெற்றோர் இத்திருக்கோயிலில் தங்கி நலம் பெற்றுச் செல்கின்றனர். இந்நடைமுறை திருச்சி மாவட்டத்திலுள்ள குணசீலம் பெருமாள் கோயிலிலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் கோயிலிலும் மட்டுமே உள்ளது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com